குறள்: 428 43. அறிவுடைமை
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்
மு. வரதராசனார் உரை
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
மு. கருணாநிதி உரை
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்