குறள்: 429 43. அறிவுடைமை

பொருட்பால்அரசியல்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்

மு. வரதராசனார் உரை

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

மு. கருணாநிதி உரை

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது

அறிவுடைமை அதிகாரம் முழுவதும்