குறள்: 436 44. குற்றங்கடிதல்
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு
மு. வரதராசனார் உரை
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.
சாலமன் பாப்பையா உரை
முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!
மு. கருணாநிதி உரை
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?