குறள்: 437 44. குற்றங்கடிதல்

பொருட்பால்அரசியல்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்

மு. வரதராசனார் உரை

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

சாலமன் பாப்பையா உரை

செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.

மு. கருணாநிதி உரை

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்

குற்றங்கடிதல் அதிகாரம் முழுவதும்