குறள்: 651 66. வினைத் தூய்மை

பொருட்பால்அமைச்சியல்

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும்

மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

மு. கருணாநிதி உரை

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்

வினைத் தூய்மை அதிகாரம் முழுவதும்