குறள்: 652 66. வினைத் தூய்மை
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை
மு. வரதராசனார் உரை
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
மு. கருணாநிதி உரை
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்