குறள்: 653 66. வினைத் தூய்மை

பொருட்பால்அமைச்சியல்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினைஆஅது மென்னு மவர்

மு. வரதராசனார் உரை

மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மு. கருணாநிதி உரை

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்

வினைத் தூய்மை அதிகாரம் முழுவதும்