குறள்: 789 79. நட்பு

பொருட்பால்நட்பியல்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை

மு. வரதராசனார் உரை

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

சாலமன் பாப்பையா உரை

நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

மு. கருணாநிதி உரை

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்

நட்பு அதிகாரம் முழுவதும்