குறள்: 790 79. நட்பு

பொருட்பால்நட்பியல்

இனையர் இவரெமக் கின்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு

மு. வரதராசனார் உரை

இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை

இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.

மு. கருணாநிதி உரை

நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்

நட்பு அதிகாரம் முழுவதும்