குறள்: 975 98. பெருமை

பொருட்பால்குடியியல்

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல்

மு. வரதராசனார் உரை

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.

மு. கருணாநிதி உரை

அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்

பெருமை அதிகாரம் முழுவதும்