குறள்: 976 98. பெருமை

பொருட்பால்குடியியல்

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு

மு. வரதராசனார் உரை

பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.

மு. கருணாநிதி உரை

பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை

பெருமை அதிகாரம் முழுவதும்